மேலும்

நாள்: 19th November 2019

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண (வயது-88) இன்று மாலை கண்டியில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திடீரென கொழும்பு வந்திறங்கினார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திடீர் அவசர பயணமாக சற்று முன்னர் கொழும்பு வந்தடைந்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரானார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  நியமிக்கப்பட்டுள்ளார்.சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.

கடமைகளைப் பொறுப்பேற்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக, கோத்தாபய ராஜபக்ச இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார்.

பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு  ஐதேக எதிர்ப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்

சிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற  நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம்.

‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்!

குணா கவியழகனின்  ‘போருழல் காதை’ நாவல்  நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்?

சிறிலங்காவின் புதிய பிரதமர், மற்றும் அமைச்சரவை நியமனங்கள், நாளை வரை தாமதமாகக் கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.