மேலும்

நாள்: 18th November 2019

24 மணி நேரத்துக்குள் பதவி விலகுவார் சிறிலங்கா பிரதமர் ரணில்

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் விலகிக் கொள்வார் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் கமல் குணரத்ன

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுள்ளதை அடுத்து, புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படவுள்ளார் என, கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

சம்பிக்க உள்ளிட்ட மேலும் 2 அமைச்சர்கள் பதவி விலகல்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, இன்று அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, அசோக அபேசிங்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

கோத்தாவுக்கு மோடி அழைப்பு – விரைவில் புதுடெல்லி பயணமாகிறார்

இந்தியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுபான்மையினரிடம் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை – சிறிலங்கா அதிபர்

சிறுபான்மையினரும் இந்த வெற்றியின் பங்குதாரர்களாக வேண்டும் என  அழைத்தேன். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று  சிறிலங்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தாவை சந்தித்தார் இந்திய தூதுவர்

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று மாலை அவரைச் சந்தித்தார்.

கோத்தாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம்

சிறிலங்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ரணிலுக்கு அழுத்தம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு அமைச்சர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று நேரத்தில் சிறிலங்கா அதிபராக பதவியேற்கிறார் கோத்தா

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக கோத்தாபய ராஜபக்ச இன்னும் சற்று நேரத்தில் அனுராதபுர ருவன்வெலிசய விகாரையில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.