மேலும்

நாள்: 7th November 2019

சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் முடிவு செய்துள்ளது.

சஜித்தின் தேர்தல் அறிக்கை – மகாநாயக்கர்களைத் தூண்டி விடுகிறார் மகிந்த

ஒற்றையாட்சியை பாதுகாத்து, சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம், எழுத்து மூல உறுதிப்பாட்டை, மகாநாயக்க தேரர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

16 மாவட்டங்களில், 119 தொகுதிகளில் கோத்தாவின் வெற்றி உறுதி – என்கிறார் டலஸ்

வரும் அதிபர் தேர்தலில் 16 மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று, அவரது ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

‘கொலைகாரர்கள் கொல்கிறார்கள்’ – மங்கள

கினிகத்தென்ன- பொல்பிட்டிய பகுதியில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் காயம்

கினிகத்தென்ன- பொல்பிட்டிய பகுதியில், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாள பரப்புரையில் ஈடுபட்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்கள் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர்.