மேலும்

நாள்: 2nd November 2019

எம்சிசி உடன்பாட்டை பகிரங்கப்படுத்தினார் மங்கள – மகிந்தவுக்கும் சவால்

அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ள மிலேனியம் சவால் உடன்பாட்டின் வரைவை சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

எம்சிசிக்கு எதிராக பேராயரின் போலி அறிக்கை – கோத்தா தரப்பின் வேலை?

அமெரிக்காவுடன், எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கடித தலைப்பில், போலியான அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் உலாவ விடப்பட்டுள்ளது.

எம்சிசி உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம் – அமெரிக்கா

சிறிலங்கா அரசாங்கத்துடன் கையெழுத்திடப்படும்,  மிலேனியம் சவால்  உடன்பாட்டுக்கு, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டியது அவசியம் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

18 வீத நிலங்கள் அமெரிக்கா வசமாகும் – எச்சரிக்கிறார் வீரவன்ச

மிலேனியம் சவால் உடன்பாட்டில், அமெரிக்காவுடன் இரகசியமாக கையெழுத்திடுவதற்கு  அலரி மாளிகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எம்சிசி உடன்பாடு ஆட்சி மாற்றத்துக்குப் பின் செல்லாது – கம்மன்பில

தற்போதைய அரசாங்கம், இரகசியமான முறையில்,  மிலேனியம் சவால் உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், ஆட்சி மாற்றத்துக்குப்  பின்னர் அந்த உடன்பாடு செல்லுபடியற்றதாகவே கருதப்படும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான உடன்பாடுகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றில் மனு

அமெரிக்காவுடன் எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை செய்து கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்சிசி உடன்பாட்டை மகாநாயக்கர்களிடம் வெளியிட்டு பகிரங்கப்படுத்துவோம் – பந்துல

மிலேனியம் சவால் உடன்பாட்டில்,  சிறிலங்காவுக்கு எதிரான  பல விடயங்கள் இருப்பதாகவும், இதுதொடர்பான ஆவணங்களை அதிபர் தேர்தலுக்கு முன்னர்,  மகாநாயக்க தேரர்களிடம் கையளித்து, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகவும், எச்சரித்துள்ளார்  பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன.

அமெரிக்கா இராணுவத்தை சிறிலங்காவுக்குள் நுழைப்பதற்கே எம்சிசி – வாசுதேவ

அமெரிக்க இராணுவத்தை சிறிலங்காவுக்குள் உள்நுழைப்பதே மிலேனியம் சவால் உடன்பாட்டின் பிரதான இலக்கு, என கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.