சுவிஸ் தூதரக பணியாளர் அச்சுறுத்தல் – அரசாங்கத்துக்கு தெரியாதாம்
சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள சுவிஸ் அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நேற்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை தடை செய்யும் நோக்கில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு, நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீரிஹானவில் உள்ள Newshub.lk இணையத்தள செய்தி நிறுவன பணியகத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நேற்றுக்காலை தேடுதல் நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவில் இடைக்கால அரசாங்கம் கடந்த வாரம் பதவிக்கு வந்த பின்னர், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் முதல்முறையாக நேற்று நடைபெற்றுள்ளது.
எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கம், இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கத்தை மேற்கோள்காட்டி பரப்பப்பட்ட செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடுமையான இழுபறிகளுக்குப் பின்னர் சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயகக் கனவு சுமந்து, சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொள்ளுவோம்.
நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் தனது அரசாங்கம் பணியாற்றும் என்றும் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு காரியத்தையும் செய்யப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.