இன்று காலை இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு
கடுமையான இழுபறிகளுக்குப் பின்னர் சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெறும் என முன்னர் கூறப்பட்டிருந்த இராஜாங்க, பிரதி அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் அதிபர் செயலகத்தில் நடைபெறும் என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,
அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனமும் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களில், காமினி லோக்குகே, ரோகித அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த யாப்பா அபேவர்தன, காஞ்சன விஜேசேகர, சனத் நிஷாந்த, கனக ஹேரத், ரொஷான் ரணசிங்க மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, துமிந்த திசநாயக்க ஆகியோரும் உள்ளடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.