பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராய்வு
சிறிலங்காவில் இடைக்கால அரசாங்கம் கடந்த வாரம் பதவிக்கு வந்த பின்னர், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் முதல்முறையாக நேற்று நடைபெற்றுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
நீண்டநேரம் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும், அமைதியை நிலைநாட்டுவதற்கு எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் முப்படைகளினதும் தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.