எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திட இணங்கவில்லை – தினேஸ் குணவர்த்தன
எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கம், இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கத்தை மேற்கோள்காட்டி பரப்பப்பட்ட செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
“தற்போது, எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு கடுமையான எதிர்ப்பு உள்ளது. எனவே, அதை மீண்டும் ஒரு முறை ஆராய வேண்டும்.
தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உடன்பாட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மக்களால் ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்து விடக்கூடாது.
எங்களுக்கு ஆபத்தான எந்தவொரு உடன்பாட்டையும் நாங்கள் செயற்படுத்தமாட்டோம். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.