இணையதள செய்தி நிறுவனத்தில் சிறிலங்கா காவல்துறை தேடுதல்
மீரிஹானவில் உள்ள Newshub.lk இணையத்தள செய்தி நிறுவன பணியகத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நேற்றுக்காலை தேடுதல் நடத்தியுள்ளனர்.
வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான சான்றுப் பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் ஆணையின் படி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் அங்கு வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான எந்த சான்றுப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.