மேலும்

மாதம்: November 2019

வடக்கு, கிழக்குக்கு வெளிநாட்டு உதவியை பெற கொடை நாடுகளின் மாநாடு – சஜித் வாக்குறுதி

வடக்கையும், கிழக்கையும் அபிவிருத்தி செய்வதற்கான வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, கொடை நாடுகளின் இரண்டு மாநாடுகளை கூட்டப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் மாநாடு இன்று – பதற்றத்தில் சுதந்திரக் கட்சி தலைமை

‘அபி சிறிலங்கா’ என்ற பெயரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு, இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

ரணிலைச் சந்தித்த ரெலோ, புளொட் – 48 மணி நேரத்துக்குள் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, ரெலோவும், புளொட்டும் அடுத்த 48 மணிநேரத்துக்குள் முடிவை அறிவிக்கவுள்ளன.

அதிபர் தேர்தலில் 13 டம்மி வேட்பாளர்கள் – கண்டுபிடித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

சிறிலங்கா அதிபர் தேர்தலில், இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், குறைந்தபட்சம் 13 போலி (டம்மி) வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

திங்களன்று சென்னை – யாழ். விமான சேவை – பயண நேரம், கட்டணங்கள் அறிவிப்பு

சென்னை- யாழ்ப்பாணம் இடையே, வாரத்தில் மூன்று நாட்களுக்கு, அலையன்ஸ் எயர் நிறுவனம் விமான சேவைகளை வரும் 11ஆம் நாள் ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அலையன்ஸ் எயர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சஜித்துக்கு ஆதரவளிக்க தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளுடன் இரகசிய உடன்பாடு இல்லை – ரணில்

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ்க் கட்சிகளுடன் எந்த இரகசிய உடன்பாட்டையும் எட்டவில்லை என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரெலோவில் இருந்து வெளியேறினார் சிவாஜிலிங்கம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோவில் இருந்து விலகிக் கொள்வதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சிறீகாந்தாவுக்கு அறிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் – தமிழ்க் கட்சிகளின் ஆதரவு யாருக்கு?

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டோ இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எனினும், சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நாடாளுமன்றில் கடைசி உரை – ‘குண்டு’ போடப் போகும் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.