மேலும்

கோத்தாவுக்கு ஆதரவு- பிள்ளையான் கட்சி அறிவிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

மட்டக்களப்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், தமது கட்சியின் இந்த முடிவை அறிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான சி.சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில், கடந்த நான்கு ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 42 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *