மேலும்

யாழ்ப்பாண விமான நிலைய திறப்பு விழா – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களை அடைவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழா வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ளது.

இதுகுறித்து யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜ் கருத்து வெளியிடுகையில்,

“தேர்தலுக்கான  நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தை அரசியல்வாதிகள் எவரும் தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டால், அது தேர்தல் சட்ட மீறலாக கருதப்படும்.

எனவே, அவ்வாறு அரசியல் நலனைப் பெறுவதற்காக விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *