மேலும்

நாள்: 16th May 2019

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இராணுவத்தில் மேஜர் புலத்வத்த – ஊடக அமைப்பு கண்டனம்

ஊடகவியலாளர்கள்கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட மூன்று சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மர்ம விமானம் என்று பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை

யாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர் காத்தான்குடியில் கைது

தற்கொலைக் குண்டுதாரிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை கொள்வனவு செய்து, அதன் ஆசனத்தை மாற்றியமைத்துக் கொடுத்தவர் என்ற சந்தேகத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் நேற்றுமுன்தினம் மாலை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாதத்தை தோற்கடிப்பது குறித்து சீன பிரதமருடனும் மைத்திரி ஆலோசனை

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சீனப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேச்சு நடத்தினார். பீஜிங்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – சுதந்திரக் கட்சி தயக்கம்

சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி காலஅவகாசம் கோரியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தீவிரவாத விசாரணைப் பிரிவு

சிறிலங்கா காவல்துறையின், தீவிரவாத விசாரணைப் பிரிவு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டோருக்கு எதிராக கடுமையான பிரிவுகளில் வழக்கு – ரணில் உத்தரவு

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறைகளில், ஈடுபட்டதாக கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான அனைத்துலக பிரகடனம், மற்றும் அவசரகால விதிகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் விமானம் விபத்துக்குள்ளானதாக பதிவிட்ட மாணவனுக்கு மறியல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குப் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியதாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.