மேலும்

நாள்: 20th May 2019

இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா- சிறிலங்கா முடிவு

இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமெரிக்காவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

றிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிராக சிஐடி விசாரணை – சட்டமா அதிபர் உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித்  ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது.

தமிழ் ஈழம் சைபர் படையே தாக்குதல் நடத்தியதாம்

தமிழ் ஈழம் சைபர் படை என்ற குழுவே, சிறிலங்காவில் 11 இணையத்தளங்களின் மீது நேற்று சைபர் தாக்குதலில், ஈடுபட்டது, என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரச கட்டமைப்புகளுக்குள் சஹ்ரான் குழு ஊடுருவல் – நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரும் கைது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.