மேலும்

நாள்: 12th May 2019

சிலாபத்தில் பதற்ற நிலை – ஊரடங்குச் சட்டம் அமுல்

சிலாபம் காவல்துறை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

பதில் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படுவாரா? – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமாக நாளை சீனாவுக்குச் செல்லவுள்ள நிலையில், பதில் பாதுகாப்பு அமைச்சரை அவர் நியமிப்பாரா என்ற கேள்வி அரசியல், இராஜதந்திர வட்டாரங்களில் எழுந்துள்ளது.

சமூக ஊடக தகவல்களை நம்ப வேண்டாம் – சிறிலங்கா இராணுவத் தளபதி

சமூக ஊடகங்களில் வெளியாகின்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளை சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

மைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவின் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள், அலைபேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுணதீவு கொலைகள் – 5 மாதங்களுக்குப் பின் முன்னாள் போராளி விடுதலை

மட்டக்களப்பு- வவுணதீவில், இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வழமைக்குத் திரும்புமாறு கோருகிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் தமது வழமையான பணிகளை அச்சமின்றி முன்னெடுக்கலாம் எனவும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.

வதிவிட நுழைவிசைவுக்கு புலனாய்வுப் பிரிவின் அனுமதி அவசியம்

வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி (Clearance) அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.