மேலும்

நாள்: 25th May 2019

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில்  மதம் செல்வாக்கு செலுத்துவது போல தெற்காசிய நாடுகளிலும்  மதம்,  அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும்  நிலையை பெற்று கொண்டுள்ளது.  குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தெற்காசிய நாடுகளில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் மத செல்வாக்கு மிகவும் அதிகரித்த நிலை உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்காவில் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கின்ற பிரேரணை- 14 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா

சிறிலங்காவுடன், புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும், 1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா முற்படுவதாகவும், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க உதவினார் என்று, மூத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட எதிர்ப்பு – நாடாளுமன்ற எதிரொலிகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை,  அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னர், வெளியிட வேண்டாம் என்று ஜேவிபி கோரியுள்ளது.