மேலும்

நாள்: 1st May 2019

சிறிலங்காவில் தமது நிறுவனங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோருகிறது சீனா

சிறிலங்காவில் உள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா கோரியுள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் அல்ல – ராஜித சேனாரத்ன

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் காசிம் அல்ல என்றும், அதன் உண்மையான தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சீன விஞ்ஞானிகள் நால்வரும் கொழும்பு குண்டுவெடிப்பில் பலி

சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில், சீன விஞ்ஞானிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

வேண்டாம் வெளிநாட்டுப் படைகள் – ஐ.நாவிடம் கூறினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் – எச்சரிக்கிறது அமெரிக்கா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீவிரவாதிகள், மேலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா நம்புகிறது என அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்

சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றாகப் பயணிக்க வேண்டாம்- மைத்திரி, ரணில், மகிந்தவுக்கு புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

வரும் வாரங்களில், நாட்டின் தலைவர்களை ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டாம் என்று சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தமது நாட்டவர்களை சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு கோருகிறது சவூதி அரேபியா

சிறிலங்காவில் உள்ள தமது நாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தை அமைக்க உதவினார் கோத்தா

அடிப்படைவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தை கொழும்பில் அமைப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உதவியிருந்தார் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம்சாட்டியுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி – சுதந்திரக் கட்சி எதிர்க்கவில்லை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.