நீர்கொழும்பில் பதற்றம் – ஊரடங்குச்சட்டம் அமுல்
சிறிலங்காவின் நீர்கொழும்பு நகரில் இன்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அங்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் நீர்கொழும்பு நகரில் இன்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அங்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்க மறுத்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கு இணங்கியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கன் விமான சேவை விமானங்களில் சிறிலங்கா விமானப்படை, ஸ்கை மார்ஷல் எனப்படும், பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறிலங்காவில் நாளை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை சுற்றாடலில், வாகனங்களை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுவின் தலைவனான மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.