மேலும்

நாள்: 6th May 2019

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

சமூக ஊடகங்கள் மீது நேற்று இரவு கொண்டு வரப்பட்ட தற்காலிக தடை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் சஹ்ரான் – சிறிலங்கா இராணுவத் தளபதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

எவ்பிஐ உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் ஐஎஸ் பயிற்சி முகாம் முற்றுகை

மட்டக்களப்பு- காத்தான்குடி எல்லையில் உள்ள ஒல்லிக்குளத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை சிறிலங்கா படையினர் நேற்று கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.

ட்ரோன்  கருவிகளை பறக்க விடத் தடை

ட்ரோன் உள்ளிட்ட அனைத்து விமானியில்லா விமானங்களும் பறக்கவிடப்படுவதற்கு சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தடைவிதித்துள்ளது.

பாடசாலைகளை இன்று திறக்க வேண்டாம்- மகாநாயக்கர்கள் கோரிக்கை

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை இன்று ஆரம்பிக்கும் முடிவை மீளாய்வு செய்யுமாறு மல்வத்த, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை

சிறிலங்காவில் மீண்டும் நேற்றிரவு தொடக்கம், சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பில் நேற்றுமாலை வெடித்த கலவரங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.