மேலும்

நாள்: 14th May 2019

வன்முறைகளைத் தூண்டி விட்ட நாமல் குமார, அமித் வீரசிங்க கைது

குளியாப்பிட்டிய, மினுவாங்கொட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டி விட்டனர் என்ற குற்றச்சாட்டில், ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் என கூறிக் கொள்ளும் நாமல் குமாரவும், மகாசோன் படையணியின் தலைவர் என கூறிக் கொள்ளும் அமித் வீரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதம் பிடித்த பிராந்தியங்கள்

மத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின்  அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடுகிறதா சிறிலங்கா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், சிறிலங்கா தூதுவர் தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி எச்சரிக்கை

வன்முறைகளைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எச்சரித்துள்ளார்.

சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவோர் மற்றும் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எச்சரித்துள்ளார்.

வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இராணுவத்துக்கு அதிகாரம்

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச பலத்தைப் பிரயோகிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் சிறிலங்கா படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமேல் மாகாணத்தில் தொடர்ந்து ஊரடங்கு

வடமேல் மாகாணத்தில் நேற்றுமாலை பிறப்பிக்கப்பட்ட காவல்துறை ஊரடங்குச் சட்டம், தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சி  – மகிந்த

எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 83 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

வன்முறையைக் கட்டுப்படுத்த படைகளுக்கு முழு அதிகாரம் – சிறிலங்கா பிரதமர்

நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரம் – ஒருவர் பலி

சிறிலங்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.