மேலும்

நாள்: 23rd May 2019

பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக, விரிவான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

தெரிவுக்குழு விசாரணைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும்  இந்த தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரேனும் உதவியுள்ளனரா என்பது குறித்து விசாரிக்க, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளது.

சந்தேக நபரை விடுவிக்குமாறு இராணுவத் தளபதியை கேட்கவில்லை – றிசாத்

கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறு தான் இராணுவத் தளபதிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் சஹ்ரானின் மற்றொரு சகா

சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின்  மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக, சிறிலங்கா காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இன்று விடுதலையாகிறார் ஞானசார தேரர்

பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை ஒப்பமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரகாலச்சட்டம் நீடிப்பு

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான,  சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

அரபு மொழிக்கு ஆப்பு வைத்தார் சிறிலங்கா பிரதமர்

வீதிகளின் பெயர்ப்பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள் தவிர்ந்த வேறெந்த மொழிகளும் இடம்பெறக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தில் 10 புதிய மேஜர் ஜெனரல்கள்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.