மேலும்

நாள்: 3rd May 2019

சஹ்ரானை கொழும்பில் சந்தித்த சகோதரி மதனியா – 20 இலட்சம் ரூபா கிடைத்த வழி அம்பலம்

தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமிடம் இருந்து கொழும்பில் வைத்து, 20 இலட்சம் ரூபாவைப் பெற்றதை, அவரது சகோதரியான, மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக் கொண்டுள்ளார்.

சிறிலங்கா பயணத்தை ரத்துச் செய்தார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

பாதுகாப்புக் காரணங்களால், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா முகமட்  குரேஷி ரத்துச் செய்துள்ளார்.

பாதுகாப்பை தளர்த்த வேண்டாம் – படையினருக்கு ரணில் அறிவுறுத்தல்

நாடு முழுவதும், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை எந்த வகையிலும் தளர்த்த வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சை வழங்க மறுத்த சிறிலங்கா அதிபர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

சந்தேக நபர்களை விசாரணை செய்ய மேலதிக அதிகாரம் கேட்கிறது சிறிலங்கா இராணுவம்

கைது செய்யப்படும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்கு, இராணுவத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரியிருக்கிறார்.

வெளிநாட்டு புலனாய்வு எச்சரிக்கை – தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ரத்து

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தேவாலயங்களில் நாளை மீண்டும் ஆரம்பமாகவிருந்த, ஞாயிறு திருப்பலி ஆராதனைகளை கத்தோலிக்கத் திருச்சபை ரத்துச் செய்துள்ளது.