மேலும்

நாள்: 24th May 2019

வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்பு குறித்து சிறிலங்கா பிரதமருடன் சீன தூதுவர் ஆலோசனை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, சீன தூதுவர் செங் ஷியுவான் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஞானசார தேரர் விடுதலை – கூட்டமைப்பு கடும் கண்டனம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் நிரந்தர தளம் அமைக்க உடன்பாடு இல்லை – அமெரிக்க தூதுவர்

சிறிலங்காவில் நிரந்தரமான அமெரிக்க தளத்தை அமைப்பது தொடர்பான எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் 8 எம்.பிக்கள் – மகிந்த, மைத்திரி அணிகள் மறுப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக, 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமித்துள்ளார்.

நாளாந்தம் விசாரிக்கப்படவுள்ள கோத்தாவுக்கு எதிரான வழக்கு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

விடுதலையானார் ஞானசார தேரர் – இனி ஆன்மீக வழி தான் என்கிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம்

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம், வரும் ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் நடைபெறும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.