மேலும்

நாள்: 19th January 2019

கொழும்பில் மீண்டும் வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தை அமைத்தது பிரித்தானியா

சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய துதரகத்தில், வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தை பிரித்தானியா மீண்டும் அமைத்துள்ளது.

அமெரிக்க- சிறிலங்கா பாதுகாப்பு உடன்பாடு ஆபத்தானது – தயாசிறி

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் விரைவில் கையெழுத்திடப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றின் மீது  மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சீனக்குடா எண்ணெய் தாங்கிகளின் மீது கைவரிசை காட்டிய இரும்பு திருடர்கள்

திருகோணமலை சீனக்குடாவில் உள்ள பிரித்தானியர் காலத்து எண்ணெய்த் தாங்கிகள் இரண்டை, இரும்புத் திருடர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

தமிழ் மக்களையும் உறவு வலயத்துக்குள் வைத்திருக்க விரும்பும் சீனா

சிறிலங்கா  மக்களுடனான தமது உறவு சிங்கள மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், தமிழ் மக்களையும் தமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புவதாகவும், சீனா தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள் மாந்தையில் கண்டுபிடிப்பு

மன்னார் – மாந்தையில் அகழ்வு ஆராய்ச்சியின் போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, உலகின் மிகப் பழமையான கிராம்பு (லவங்கம்) என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் என அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு

இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிபரின் படுகொலை வழியை பின்பற்றப் போகும் சிறிசேன – சர்ச்சையில் சிக்கினார்

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் அதிபர்  றொட்றிகோ டுரேர்ரே நடத்தி வரும் போரை வரவேற்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இது உலகிற்கு முன்உதாரணம் என்றும் மெச்சியுள்ளார்.

சீன மொழியில் சிறிலங்கா பிரதமரின் சுயவரலாற்று நூல்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுய வரலாற்று நூல் சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களுக்கு ஐதேக உறுதி

புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழு, மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளது.