மேலும்

நாள்: 2nd January 2019

புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற விடமாட்டோம் – மகிந்த அணி

நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம்

வடக்கிலும் தெற்கிலும், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய, சிறிலங்காவின் முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் பிறேமதாச உடுகம்பொல நேற்று மரணமானார்.

பதவியேற்றார் புதிய கடற்படைத் தளபதி

சிறிலங்கா கடற்படையின் 23 ஆவது தளபதியாக, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நேற்று பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் அவர் தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.

மகிந்தவின் வழிகாட்டலிலேயே பொதுஜன முன்னணி செயற்படும் – பசில்

மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணி செயற்படும் என்று அந்தக் கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

ஆபத்தான வாக்குறுதியை கூட்டமைப்புக்கு கொடுக்கவில்லை – அர்ஜூன ரணதுங்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அரசாங்கம், நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது புதிய அமைச்சரவை

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதிபர் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவார்.