மேலும்

நாள்: 7th January 2019

வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம்

வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இவருக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் உறுதியற்ற நிலையால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் இழுபறி

சிறிலங்காவின் அரசியல் உறுதியற்ற நிலையினால், இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம், தாமதமடைந்துள்ளது என்று இந்திய விமானத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அர்த்தம் தெரியாதவர்களே எதிர்க்கின்றனர்- ராஜித சேனாரத்ன

அதிகாரப்பகிர்வின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான், புதிய அரசியலமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

29 கட்சிகளுடன் பாரிய கூட்டணி அமைக்கும் மொட்டு கட்சி

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து  பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தினால் சர்ச்சை

சிறிலங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானம்  ஒன்று, திருகோணமலை, சீனக்குடா விமானத் தளத்தில் இருந்து, அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார,  சிறிலங்கா இராணுவ காவல்துறையினால் கைது செய்யப்படவுள்ளார்.