மேலும்

நாள்: 16th January 2019

கோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் சமல் – அதிபர் வேட்பாளராக தானும் தயார் என்கிறார்

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.

சவேந்திர சில்வா  விவகாரம் – நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளார் சம்பந்தன்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பவுள்ளது.

இந்தியாவிடம் இருந்து 1000 மில்லியன் டொலர் நிதியைப் பெறும் முயற்சியில் சிறிலங்கா

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டொலரை நாணயப் பரிமாற்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக, பதில் நிதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்சுடன் 6 உடன்பாடுகளில் இன்று கையெழுத்திடுகிறது சிறிலங்கா

சிறிலங்காவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் இன்று ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழக மீன்பிடிப் படகு மோதி சிறிலங்கா கடற்படைப் படகு சேதம்?

நெடுந்தீவுக் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களைத் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் போது, சிறிலங்கா கடற்படையின் அதிவேக பீரங்கிப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்த அரசு வாங்கிய 1 பில்லியன் டொலர் கடனை அடைத்தது சிறிலங்கா

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 2014ஆம் ஆண்டு பெறப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் நேற்று சிறிலங்கா அரசாங்கத்தினால் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.