மேலும்

நாள்: 1st January 2019

அமைச்சர்களின் சிறகை வெட்டும் மைத்திரி – ஐதேகவுக்கு எதிராக புதிய போர்

அமைச்சர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்காக, தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள் நுழைய சந்திரிகாவுக்குத் தடை

சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கவும், அவரது ஆதரவாளர்களும், நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இராணுவத் தலைமை அதிகாரிக்கு 10 மேஜர் ஜெனரல்களின் பெயர்கள் பரிந்துரை

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு 10 மூத்த மேஜர் ஜெனரல்களில் பெயர்களை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பரிந்துரைத்துள்ளார்.

ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமை – ஐக்கிய தேசிய முன்னணி முடிவு

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும், ஐக்கிய தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது.

சில ஆளுனர்களே பதவி விலகினர்  

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய சில மாகாண ஆளுனர்கள் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழை விழுங்கியது சீன மொழி

சிறிலங்காவில் சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு சீன அதிபரின் புத்தாண்டு வாழ்த்து

சீன அதிபர் ஷி ஜின்பிங், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை கொடுத்தனுப்பியுள்ளார்.

இந்தியாவின் திட்டங்களை வேகமாக முன்னெடுப்பதாக சிறிலங்கா வாக்குறுதி

சிறிலங்காவில், இந்தியாவினால் நிதியிடப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.