மேலும்

நாள்: 26th January 2019

இராணுவ முகாம் முன் போராட்டத்தில் குதித்தனர் கேப்பாப்புலவு மக்கள்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், இன்று சிறிலங்கா படைமுகாம் வாயிலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு நீதி கோரி யாழ். நகரில் போராட்டம்

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது நினைவு நாளான இன்று, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அதிபர் தேர்தலுக்கு தயாராகுமாறு கோத்தாவுக்கு மகிந்த பச்சைக்கொடி

அதிபர் தேர்தலுக்குத் தயாராகுமாறு, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானங்தாங்கிக்கு சிறிலங்காவில் இருந்து விநியோகம்

சிறிலங்காவின் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக விநியோக மையத்தில் இருந்து, அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் விமானந்தாங்கி கப்பலுக்கான பொருட்கள் விநியோகம் நேற்று முன்தினம் தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துப் படகுகளை வழங்கியது அவுஸ்ரேலியா

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை நேற்று வழங்கியுள்ளது. ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இந்தப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படையின் ரங்கல்ல தளத்தில் இடம்பெற்றது.

சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும் தாய்லாந்து கிளம்புகிறார் சிறிசேன

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல் போர்க்குற்றம் – என்கிறார் ஐ.நா பொதுச்செயலர்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறிலங்கா படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது.