மேலும்

நாள்: 13th November 2018

சற்று நேரத்தில் வெளியாகிறது உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு இன்னும் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படவுள்ளது.

மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – சட்டமா அதிபர் வாதம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருநாகலவில் மீண்டும் களமிறங்குகிறார் மகிந்த

வரும் ஜனவரி 05ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

”எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று” – விக்னேஸ்வரன்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணி உடனடியாக ஒரு முடிவை எடுக்கும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கான முதல் அரசிதழ் அறிவிப்பு வெளியானது

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதலாவது அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி.பெரேரா நேற்று வெளியிட்டுள்ளார்.

இன்று காலை மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.