மேலும்

மாதம்: September 2018

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவு மீது பாய்ந்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இன்னமும் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாத நிலையிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவும், சட்டமா அதிபர் திணைக்களமும் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அனுராதபுர சிறையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போர்க்குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு ஐ.நாவைக் கோருவேன் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு ஐ.நாவிடம் கோரப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீதித்துறை செயல்முறைகளில் அனைத்துலக தலையீடுகள் அவசியம் – சுமந்திரன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியாமல், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாடு சென்றிருக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மைத்திரி, கோத்தா படுகொலைச் சதி – விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.

ஆட்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலியில் கைது

சட்டவிரோதமாக நான்கு பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் இத்தாலியின் மிலன், மல்பென்சா விமான நிலைய எல்லை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடன் பொறி குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த சிறிலங்கா பிரதமருக்கு சீனா வரவேற்பு

சீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.

ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கை சந்தித்தார் மகிந்த

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அவசரமாக ஊடக ஆசிரியர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாக ஊடகங்களின் பிரதானிகள், ஆசிரியர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர்கள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை, சமஷ்டியையும் கொடுக்க முடியாது – மகிந்த திட்டவட்டம்

தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.