மேலும்

மாதம்: September 2018

இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவதைக் கண்டித்த சிறிலங்கா அதிபர்

நீதிமன்ற நடவடிக்கையை எடுக்காமல், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.

கீத் நொயர் கடத்தல் குறித்து எதுவும் தெரியாது – விசாரணையில் கோத்தா தெரிவிப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘அதிபர் தேர்தலில் என் சகோதரர் நிச்சயம் போட்டியாளராக இருப்பார்’ – மகிந்த செவ்வி

2019 அதிபர் தேர்தலில் தனது சகோதரர் நிச்சயமாகப் போட்டியாளராக இருப்பார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ‘தி ஹிந்து’ஆங்கில நாளிதழுக்கு அவர் வழங்கிய செவ்வியில் முழுமையான விபரம்.

விரைவில் சிறிலங்கா அதிபராகப் போகிறாராம் மகிந்த – சுவாமியின் ஆரூடம்

சிறிலங்காவின் அதிபராக விரைவில் பொறுப்பேற்கப் போகிறவர் என்று  புதுடெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் மகிந்த ராஜபக்சவை அறிமுகப்படுத்தியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

சீனாவின் கடன்பொறியில் சிறிலங்கா சிக்கவில்லை – என்கிறார் ரணில்

சீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா விழுந்து விட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

இனப்போரை நடத்தவில்லை – புதுடெல்லியில் மகிந்த

தாம் தமிழர்களுக்கு எதிராகப் போரை நடத்தவில்லை என்றும், விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்துக்கு எதிரான போரையே நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

இன்று மதியம் அவசர அமைச்சரவைக் கூட்டம்

சிறிலங்கா அமைச்சரவை இன்று மதியம் அவசரமாகக் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடியுடன் மகிந்த சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இன்று மாலை புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவுடன் ஒட்டிக் கொள்ளும் ஆர்வத்தில் மகிந்த – ‘தி ஹிந்து’ செவ்வியில் ஒப்புக் கொண்டார்

2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்றும், தாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்று முன்மொழியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா நாடு கடத்திய 9 இலங்கையர்களும் சிஐடியினரால் கைது

அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனார்.