மேலும்

மாதம்: August 2018

அடுத்தவாரம் நேபாளத்தில் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகங்களில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா, நேற்று அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.

பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியைத் தரவில்லை – ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட போது, தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வெண்சுருட்டு விற்பனையை நிறுத்திய 107 நகரங்கள் – யாழ்ப்பாணம் முன்னணியில்

சிறிலங்காவில் 100இற்கும் அதிகமான நகரங்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிப்பதாக, சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன விவகாரம் குறித்து சிறிலங்கா தலைவர்களிடம் கேள்வி எழுப்பிய ஜப்பானிய அமைச்சர்

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவச் செயற்பாடுகள் இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே ஜப்பானின் நிலைப்பாடு என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா தெரிவித்துள்ளார்.

மகிந்தவை அழைக்க மெதமுலானவுக்குச் சென்ற சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, மெதமுலானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்துள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்தை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இன்று திருகோணமலைத் துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவமும், அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவும் இணக்கம்

சிறிலங்கா இராணுவத்தின் மனிதாபிமான ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு, முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.

மயிலிட்டியில் சிறிலங்கா அதிபர் – பாடசாலைகளை விடுவிக்க இணக்கம்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் – ஜப்பானுக்கு சிறிலங்கா அளித்துள்ள வாக்குறுதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனா இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த சிறிலங்கா அனுமதிக்காது என்று, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவிடம் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.