மேலும்

நாள்: 21st August 2018

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றிரவு சிறிலங்கா வந்த ஜப்பானிய பாதுகாப்பு  அமைச்சர் ஒட்சுனோரி ஒனோடெரா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவின் இளைய சகோதரர் திடீர் மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான சந்திர ருடோர் ராஜபக்ச தங்காலையில் இன்று மரணமானார் என்று ராஜபக்ச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகிந்த போட்டியிட முடியுமா? – உச்சநீதிமன்ற விளக்கத்தை நாடவுள்ளார் பீரிஸ்

2019 அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமா என்பது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக, உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோரவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

போர் நினைவுச் சின்னங்களை அகற்றக் கோரும் விக்கியின் கடிதம் – மௌனம் காக்கும் மைத்திரி

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நள்ளிரவு கொழும்பு வந்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்றிரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும், ஜப்பானிய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையிடமே

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையினரிடமே உள்ளது என்றும், அது சீனர்களின் கையில் இல்லை என்றும், அங்கு பணியாற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.