மேலும்

பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியைத் தரவில்லை – ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட போது, தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் ஹம்பேர்க் நகரில் Bucerius Summer School இல்  நேற்று முன்தினம், நடந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே  அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.

“ வன்முறைகளால் எனது குடும்பத்தில் இரண்டு பேரை இழந்திருக்கிறோம். எனது பாட்டி (இந்திரா காந்தி) மற்றும் எனது தந்தை ( ராஜிவ் காந்தி) ஆகியோர் கொல்லப்பட்டனர். எனவே வன்முறைகளால் நான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

நான் உண்மையில் எனது அனுபவங்களில் இருந்து பேசுகிறேன். வன்முறைக்குப் பின்னர்  நீங்கள் முன்னேறுவதற்கு உள்ள ஒரே வழி மன்னிப்புத் தான். வேறு வழி இல்லை. மன்னிப்பதற்கு நீங்கள் சரியாக என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

எனது தந்தை 199இல் கொல்லப்பட்டார். எனது தந்தையைக் கொன்றவர், 2009இல் சிறிலங்காவில்  கொல்லப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன்.

நான் எனது சகோதரி பிரியங்காவை தொலைபேசியில் அழைத்தேன். “இது மிகவும் விசித்திரமானது, ஆனால் நான் மகிழ்ச்சியடையவில்லை. இறந்து கிடந்தவர் எனது தந்தையைக் கொன்றவர் என்ற அடிப்படையில், நான் கொண்டாட வேண்டும். ஆனால் எப்படியோ நான் மகிழ்ச்சியடையவில்லை. ” என்றார் அவர்.

அதற்கு நானும், “மிகவும் சரி, நானும் கூட மகிழ்ச்சியடையவில்லை” என்றேன்.

நான் மகிழ்ச்சியைடையாததற்குக் காரணம்,  அவரது குழந்தைகளின் நிலையில்  இருந்து தான் நான் பார்த்தேன்.

அவர் விழுந்து கிடக்கும் போது, உண்மையில்  என்னைப் போன்ற பிள்ளைகள் அழுது கொண்டிருப்பார்கள் என்றே நான் உணர்ந்தேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியைத் தரவில்லை – ராகுல் காந்தி”

  1. Ram says:

    Your Mum gave free hand to wipe the LTTE out. Every Eelam Tamil knows this. so, do not pretend that you were not happy when LTTE was annihilated. Because your Mum was keen to get rid of LTTE and took revenge for your Dad’s murder but if LTTE did that massacre why the other congress leaders were not present in TamilNadu at that time?? What was the role of Subramanian swamy, Chandra swamy in your Dad’s murder.??Just because your dad passed away, your Mum gets all the assets belonged to Nehru family. She became the leader of the Congress party. you cannot even think. Furthermore, Your Mum’s revenge of LTTE brought the Chinese into SriLanka. If LTTE was there this would not have happened. Neither India nor the West can stop the Chinese presence in SriLanka. No one can build LTTE or any other group any more. It is too late. Your Mum does not have brain. You too do not have any brain. Suppose If you become next P.M, No one can save India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *