மேலும்

நாள்: 17th August 2018

நாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்

முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர் வெளியேறிச் சென்றனர்.

மீண்டும் சரியும் சிறிலங்காவின் நாணய மதிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அமைச்சர்கள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும், ரிஷாட் பதியுதீனும் பங்கேற்கவுள்ளனர்.

எல்லை வரம்பு அறிக்கையை அங்கீகரித்தால் தான் ஜனவரியில் தேர்தல்

எல்லை வரம்பு அறிக்கையை நாடாளுமன்றம் இந்த மாதம் அங்கீகரித்தால்,  ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் நடத்த முடியும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கீத் நொயாரைக் கடத்தியவர்களை மகிந்தவுக்கு நன்றாகத் தெரியும் – அஜித் பெரேரா

ஊடகவியலாளர் கீத் நொயாரை கொலை செய்யாமல் காப்பாற்றியதற்காக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி கூற வேண்டும் என்று சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.