மேலும்

நாள்: 25th August 2018

மோடி – மைத்திரி சந்திப்பு – விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

இம்மாத இறுதியில் நேபாளத்தில் நடக்கவுள்ள பிம்ஸ்ரெக் மாநாட்டின் போது, ஏனைய உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் இருதரப்பு பேச்சுக்களை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கிற்கு உதவ சீனா விருப்பம்

சிறிலங்காவின் வடக்கு- கிழக்கில் மீள்கட்டுமானப் பணிகளுக்கு உதவ விருப்பம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் அமெரிக்க போர்க்கப்பலில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி

திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் கப்பலில் உள்ள அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இன்று வியட்னாம் பயணமாகிறார் சிறிலங்கா பிரதமர்

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்னாம் தலைநகர் ஹனோய்க்கு செல்லவுள்ளார்.

மாகாணசபை தொகுதி எல்லை வரையறை அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரிப்பு

மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லைகளை வரையறை செய்யும் குழுவின் அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தோற்கடிக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப்படை மீது சரத் பொன்சேகா சரமாரி குற்றச்சாட்டு

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று வெளியிட்ட கருத்தினால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

அதிபர் செயலணி விவகாரம்: கூட்டமைப்பு – விக்னேஸ்வரன் இடையே வெடித்தது கலகம்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்கும் விவகாரத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடு வெடித்துள்ளது.