மேலும்

நாள்: 14th August 2018

11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது

கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் அச்சிடப்படும் சிறிலங்காவின் நாணயத் தாள்கள்

சிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் நாணயத் தாள்களை சீனாவே அச்சிடுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – குமார் சங்கக்கார

அரசியலில் ஈடுபடும் எண்ணம் ஏதும் தமக்கு இல்லை என்றும், தாம் ஒருபோதும் அரசியலுக்கு வரப் போவதில்லை என்றும், சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தானின் கடல்சார் பாதுகாப்புப் படையின் போர்க்கப்பலான, பிஎம்.எஸ்எஸ் காஷ்மீர், நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – ஆளுனர் பரிந்துரை

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண அமைச்சர்கள் தாமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை – முற்றுகிறது முறுகல்

முல்லைத்தீவு- நாயாறு பகுதியில்  நேற்றிரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.