மேலும்

நாள்: 12th August 2018

பேசலாம் என்று பிரபாகரனை அழைத்தேன், அவர் பதிலளிக்கவில்லை – என்கிறார் மகிந்த

தமிழர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கு பேச்சு நடத்துவதற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தாம் அழைப்பு விடுத்த போதும், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக மிக்சேல் பசெலெட் நியமனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக சிலியின் முன்னாள் அதிபர் மிக்சேல் பசெலெட் அம்மையார் செப்ரெம்பர் 1 ஆம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நிதியை வழங்கவுள்ளது அமெரிக்கா

சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு அதிகளவு பாதுகாப்பு நிதியை அளிப்பதற்கு வழி செய்யும், 2019ஆம் நிதியாண்டுக்கான 700 பில்லியன் டொலருக்கும் அதிகமான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார்.

யாருடன் கூட்டு என்று தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவு – விக்னேஸ்வரன்

வட மாகாண சபைத் தேர்தலில் யாருடன் கூட்டுச் சேருவது என்று,  தேர்தல் அறிவிக்கப்படும் போதே தீர்மானிக்கப்படும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வருகிறது பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடல் பாதுகாப்புப் படையின் போர்க்கப்பலான காஷ்மீர் நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

50 சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவில் தொடருந்து சாரதிப் பயிற்சி

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேருக்கு, இந்தியாவில் தொடருந்துகளைச் செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.