மேலும்

நாள்: 20th August 2018

திருகோணமலைத் துறைமுகத்தில் ஜப்பானிய நாசகாரி

ஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவின் வாக்குமூலம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், பெறப்பட்ட வாக்குமூலம், கல்கிசை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பிரதமர் ரணில் தொலைபேசியில் பேச்சு

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கானுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவுஸ்ரேலியா நடத்தவுள்ள பிரமாண்ட கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை

அவுஸ்ரேலியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ககாடு கூட்டு கடற்படைப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

அம்பாந்தோட்டையை வசப்படுத்தியது சீனாவின் இராணுவ மூலோபாயம் – பென்டகன்

சீனா தனது இராணுவ மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் – சபாநாயகருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் விகாரைகள் கட்டத் திட்டமா? – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர்

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் கூறிய குற்றச்சாட்டை வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மறுத்துள்ளார்.

“கடற்புலிகளைத் தடுக்க முடிந்தது, வாஜ்பாயினால் தான்“ – ரணில்

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், சிறிலங்காவின் உண்மையான நண்பனாக இருந்து,  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு உதவியவர் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.