மேலும்

மாதம்: August 2018

நேவி சம்பத்தை 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியை எதிர்வரும் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொச்சிக்கான பயணங்களை இடைநிறுத்தியது சிறிலங்கன் விமானசேவை

கொழும்பு- கொச்சி நகரங்களுக்கிடையிலான விமான சேவையை சிறிலங்கன் விமான சேவை வரும் சனிக்கிழமை வரை இடைநிறுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் கண்ணிவெடிகளில் இருந்து யாழ்ப்பாணம் விடுவிக்கப்படும்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துடனான தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா

பண்டைக்காலத்தில்  சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இருந்த கடல்வழி வணிகத் தொடர்புகள் குறித்து, சீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள், அல்லைப்பிட்டியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு 1 மில்லியன் பவுண்ட்களை வழங்குகிறது பிரித்தானியா

வடக்கு, கிழக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக் குடியேறியுள்ள 600 குடும்பங்களின், அடிப்படை உட்கட்டமைப்பு சேவைகளுக்காக பிரித்தானிய 1 மில்லியன் பவுண்ட்களை கொடையாக வழங்கியுள்ளது.

சீனாவில் அச்சிடப்படுகிறதா சிறிலங்கா நாணயத் தாள்கள்? – மறுக்கிறது மத்திய வங்கி

சிறிலங்கா நாணயத் தாள்கள் சீனாவில் அச்சிடப்படுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்டில் வெளியாகிய தகவல்களை சிறிலங்கா மத்திய வங்கி நிராகரித்துள்ளது.

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவை விசாரணைக்கு அழைக்கிறது குற்றப் புலனாய்வுப் பிரிவு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

6 மாதங்களுக்கு முன்னரே மலேசியாவில் இருந்து திரும்பினார் நேவி சம்பத்

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நேவி சம்பத், மலேசியாவில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தார் என்று கூறப்படுகிறது.

11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது

கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் அச்சிடப்படும் சிறிலங்காவின் நாணயத் தாள்கள்

சிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் நாணயத் தாள்களை சீனாவே அச்சிடுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.