மேலும்

திருகோணமலையில் அமெரிக்க போர்க்கப்பலில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி

திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் கப்பலில் உள்ள அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

யுஎஸ்எஸ் அங்கரேஜ் கப்பலில், அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவின் 13 ஆவது அதிரடிப்படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கொமாண்டோக்கள் திருகோணமலை வந்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படையின் பெண்கள் படையினருக்கு  அமெரிக்க கடற்படையின் பெண் மரைன் கொமாண்டோக்கள் இன்று தற்காப்புப் பயிற்சிகளை அளித்தனர்.

அதேவேளை, சிறிலங்கா – அமெரிக்க மரைன் படையினரும் கூட்டாக பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்கிடையே, திருகோணமலை துறைமுகத்தில் அஷ்ரப் இறங்குதுறையில் தரித்து நிற்கும் யுஎஸ்எஸ் அங்கரேஜ் கப்பலின் மேற் தளத்தில், இரண்டு Bell UH-1Y Venom மீட்பு உலங்குவானூர்திகளும், Bell AH-1 Super Cobra தாக்குதல் உலங்குவானூர்திகளும் தரித்துள்ளன.

இந்தக் கப்பலில் கனரக  சண்டை வாகனங்களை தரையிறக்கும் வசதிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *