மேலும்

மகிந்தவின் ஆசியின்றி மைத்திரியால் மீண்டும் போட்டியிட முடியாது – டிலான்

மகிந்த ராஜபக்சவின் ஆசியின்றி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், 2020 நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட முடியாது என்று, சிறிலங்கா சுத்தந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இணைந்து செயற்பட இணங்கியுள்ளனர்.

2010 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொருத்தமானவர் என்று, ராஜபக்ச சகோதரர்களான,  கோத்தாபய , பசில், சமல் மற்றும் எஸ்.பி.திசநாயக்க என்று பல்வேறு தரப்பினரும், பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர்.

அமைச்சர் துமிந்த திசநாயக்கவோ, அடுத்த அதிபர் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் என்று கூறுகிறார்.

அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்ச ஒப்புதலளிக்க வேண்டும். அவரது ஆசி இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *