மேலும்

நாள்: 29th April 2018

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்கிறது காணாமல் போனோர் பணியகம்

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள், அடுத்த மாதம் தொடக்கம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

நாளை மறுநாள் காலை பதவியேற்கிறது சிறிலங்காவின் புதிய அமைச்சரவை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் காலை 10 மணியளவில் பதவியேற்கவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பு தலைமை கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் – என்கிறார் முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை போதிய செயற்திறனின்றி இருப்பதாகவும், அவர்கள் கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

16 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான நிலையில் சிறிலங்காவின் பொருளாதாரம்

16 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் மிகக் குறைந்த நிலை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின்  ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு உதய முயன்றதாக நால்வருக்கு சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதங்களையும், பொருட்களையும் சிறிலங்காவுக்கு கடத்த முயன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மட்டக்களப்பு: நீதி கோரும் போராட்டமும் சிவராம் நினைவேந்தல் நிகழ்வும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் (தராகி) அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டமும், மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றன.