மேலும்

நாள்: 14th April 2018

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் இல்லை என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி

ஐதேகவுடன் இணைந்து தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்கு,  சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது பிரதிநிதியாக கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை நியமித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகருக்கான சுரங்க வீதி – 800 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது சீனா

1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, கொழும்புடன் இணைக்கும் நிலத்தடி சுரங்க வீதி வலையமைப்பில் 800 மில்லியன் டொலரை சீன நிறுவனம் ஒன்று முதலீடு செய்யவுள்ளது.

ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்

ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றுள்ளார்.

நாடாளுமன்ற முடக்கத்தினால் பாதகமான தாக்கம் இருக்காது – சிறிலங்கா அரசு

நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவு, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எந்த பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

683 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்து மீண்டன

யாழ். மாவட்டத்தில் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் வசமிருந்த பொதுமக்களின், 683 ஏக்கர் காணிகள் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.