மேலும்

நாள்: 26th April 2018

இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியமை மற்றும், சில வாரங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவளித்தமை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் சிறிலங்காவின் கடன்சுமை 47 பில்லியன் ரூபாவாவினால் அதிகரித்துள்ளது.

திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை

அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயல்முறைகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.