மேலும்

நாள்: 3rd April 2018

மைத்திரியைச் சந்தித்தார் சம்பந்தன் – இன்றிரவு முடிவை அறிவிப்பார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையிலும் ஆட்சியமைத்தது கூட்டமைப்பு

பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு, ஈபிடிபி, ஐதேக, சிறிலங்கா பொது ஜன முன்னணி என்பன ஆதரவு அளித்துள்ளன.

கரவெட்டி பிரதேச சபையில் ஆட்சியமைக்க முயன்ற அங்கஜனின் தந்தை தோற்கடிப்பு

வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி)  பிரதேச சபைகயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிசாளர் பதவியைக்  கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது.

ரணிலுக்கு கைகொடுக்கும் ஈபிஆர்எல்எவ்?

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஈபிஆர்எல்எவ் ஆதரவு அளிக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலுக்கு ஆதரவா? – கூட்டமைப்பின் முடிவு இன்று

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முடிவெடுக்கவுள்ளது.

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் இந்தியப் பயணத்துக்கு நீதிமன்றம் தடை

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தற்போதைய தளபதியுமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வழங்கிய அனுமதியை ரத்துச் செய்துள்ள கல்கிசை நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது – ஐதேகவை எச்சரித்த சிறிலங்கா அதிபர்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இன்று போய்…. நாளை வா“ – ஐதேகவினரை அனுப்பிய சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஐதேக நாடாளுமன்றக் குழுவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ரணில் பதவி விலக வேண்டும் – சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு முடிவு

நம்பிக்கையில்லா பிரேரணை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு கோருவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு  தீர்மானித்துள்ளது.