மேலும்

நாள்: 9th April 2018

துமிந்தவையும், மகிந்தவையும் நீக்கி விட்டு அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து மகிந்த அமரவீரவையும் நீக்குவதற்கும், சுதந்திரக் கட்சியின் நிர்வாகத்தைக் கைப்பற்றவும் கட்சியின் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தோல்விக்கு காரணம் யார்?- கூட்டு எதிரணிக்குள் பிடுங்குப்பாடு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

போர்க்கப்பல் கொள்வனவுக்காக ரஷ்யா சென்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

போர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சு நடத்துதற்காக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பரபரப்பான சூழலில் இன்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய  குழுக் கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதேகவின் போர்க்கொடியால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேற்ற வேண்டும் என்று ஐதேக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.