மேலும்

நாள்: 12th April 2018

7 மாகாண ஆளுனர்கள் மாற்றம் – வடக்கில் வெற்றிடம்

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே ஆளுனர்களாக இருந்தவர்களே உள்ளக இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.

விகிதாசார முறைப்படி மாகாணசபைத் தேர்தல் – ரணிலிடம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தல்

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ், முஸ்லிம் கட்சிகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளன.

புத்தாண்டு முடிந்ததும் வெளிநாடு பறக்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் நாள் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்குள் புதிய அமைச்சரவை

சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பதவியேற்கும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பதில் முதல்வரானார் சர்வேஸ்வரன்

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக, கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் நேற்று  பதவியேற்றுள்ளார்.

கூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.