மேலும்

விடுதலைப் புலிகளுக்கு உதய முயன்றதாக நால்வருக்கு சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதங்களையும், பொருட்களையும் சிறிலங்காவுக்கு கடத்த முயன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கிருஷ்ணகுமார், சுபாஸ்கரன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகளும், இராஜேந்திரன், சசிகுமார் ஆகிய இருவருக்கும் தலா மூன்றரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நால்வரும், 2014ஆம் ஆண்டு இராமேஸ்வரன் அருகே கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து ஒரு தொகை சயனைட், மற்றும் புவிநிலைகாட்டி கருவிகள் கைப்பற்றப்பட்டன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளமைப்பதற்காக, இவற்றை சிறிலங்காவுக்கு கடத்துவதற்கு முயன்றார்கள் என்று இவர்கள் நால்வர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *